![](https://minnal24.com/wp-content/uploads/2024/12/ஆழிப்பேரலையின்-ஆறாத-வடுக்கள்-ஏற்பட்டு-20-வருடங்கள்-66.png)
தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.
அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர்.
அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். பின்னர் அனலைதீவு மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகளை ஆராய்ந்ததோடு அனலைதீவு வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டனர்.
மேலும் வேலணை மற்றும் மண்டைதீவுகளுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியசாலைகளின் நிலவரங்களை ஆராய்ந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்