திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பொது வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

தற்போது உன் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் திருகோணமலை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்குள் ஆறு பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 26 வயதுடைய தாதியருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வருபவர்கள் கட்டாயமாக முக கவசங்களை அணிந்து வருமாறும் சமூக இடைவெளிகளை பேணுமாறும் மக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் திருகோணமலை சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.