தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது – இஸ்ரேல் பிரதமர்

சகல இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரையில் ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கனுடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் அறிவித்துள்ளார்.

அதேநேரம் பொது மக்களை பாதுகாப்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறித்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, காஸாவில் நோயாளர் காவு வண்டிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அல்-ஷிஃபா வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நோயாளர் காவு வண்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது..

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்