தனியார் பேருந்து சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு

ஜாஎல – நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்து சாரதிகளை வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தாக்கியதாகக் கூறி திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அப் பகுதியில் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்