சித்திரை புத்தாண்டு 2024 ஆடை நிறம்

 

💠உலகில் அனைத்து பாகங்களிலும் இருக்கும் மக்கள் குரோதி வருடத்தில் வஞ்சக மற்றும் குரோத எண்ணங்களுடன் இருப்பவர்களாக இந்த குரோதி வருடம் (2024) அமைய போவதாக சொல்லப்படுகின்றது.

💠குரோதி வருடத்தில் வருடத்தின் அரைவாசி காலம் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என்பதுடன் அதிக நீர் பெருக்கும் ஏற்படும். மிகுதியான காலப்பகுதி அதிக வெப்பம் நிறைந்து கடுமையான வறட்சி நிலவும் என சொல்லப்படுகின்றது.

💠இந்த குரோதி வருடத்தில் அதிக வெப்ப நிலையும் அதிக குளிரும் பதிவாக கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

💠வருகின்ற பங்குனி 31 ஆம் நாள் அதாவது 13.04.2024 சனிக்கிழமை முன் இரவு 8 மணி 15 நிமிடத்திலே வாக்கிய பஞ்சாங்கபடி குரோதி வருடம் பிறக்கின்றது. இதேவேளை பங்குனி 31 ஆம் நாள் 13.4.2024 சனிக்கிழமை இரவு 9 மணி 4 நிமிடத்திலே திருக்கணித பஞ்சாங்க படி குரோதி வருடம் பிறக்கின்றது.

💠அந்த வகையில் நாம் ஒவ்வொருவருடைய பாரம்பரியத்தின் படியும் நாங்கள் கடைப்பிடிக்கும் பஞ்சாங்கங்களின் அடிப்படையில் சித்திரை வருடத்தை நாம் கொண்டாட முடியும்.

💠எனினும் இலங்கை வாழ் மக்கள் பொதுவாக வாக்கிய பஞ்சாங்கத்தையே கடைபிடிப்பதால் இந்த பதிவில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கூறப்பட்ட விடயங்களை பார்க்கலாம்.

விஷ புண்ணிய காலம்:

13.04.2024 அன்று மாலை 4 மணி 15 நிமிடம் முதல் நள்ளிரவு 12 மணி 15 நிமிடம் உள்ள கால பகுதியில் மருத்து நீர் வைத்து தலையில் புன்கு இலையும் காலிலே ஆலை இலையும் வைத்து ஸ்னாநம் செய்து கபிலம் மற்றும் பட்டு போன்ற வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளை கரை அமைந்த புதிய பட்டாடை தரித்து நீல கல்வைரம் முதலானவற்றால் செய்யப்பட்ட ஆபரணம் தரித்து சிவந்த சந்தனம் பூசி நறுமணம் பூசி விக்கினேஸ்வரரை வழிபட்டு இயன்ற அளவு தான தர்மம் செய்து பெற்றோர் முதலியோரை வணங்கி அவர்களுடைய ஆசி பெற்று உற்றார் உறவினர்களுடன் அளவளவாகி அறுசுவை உணவுகள் வேப்பம் பூ பிட்டு சேர்த்தருந்தி தாம்பூலம் தரித்து கண்ணாடியில் முக தரிசணம் செய்து புதிய வருட பலன்களை வாசித்தும் கேட்டும் நன்குணர்ந்து தத்தம் சமய நூல்களை பாராயணம் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

குரோதி வருடமானது 13.04.2024 சனிக்கிழமை இரவு பிறக்கும் அதேவேளை 14.04.2024 ஞாயிற்று கிழமை அன்று தான் சித்திரை முதலாம் நாள் காலை மன தூய்மையோடு எழுந்து நாங்கள் வழிபடுகின்ற கடவுளை தியானித்து தாம் முன் செய்தவைகளையும் இனி செய்ய போவதையும் அறம் பொருள் இன்பங்களையும் சிந்தித்து கண்ணாடி, தீபம், நிறைகுடம், தங்களுடைய வலக்கை, தாய் தந்தையர், ஆசிரியர், அவர்களுடைய பாதம் பணிந்து தேவதைகளின் திரு உருவம் முறை புத்தகம், தாமரை முதலிய பூக்கள், பழ வகைகள், மஞ்சள் குங்குமம், சந்தனம் வெற்றிலை பாக்கு முதலிய மங்கள பொருட்களை தரிசித்து நித்திய கருமங்களை முடித்து தங்கள் வீடுகளிலே சூரியனுக்கு பொங்கல் செய்து பூஜை வழிபாடுகளை செய்து பூஷன தான தர்மங்களை செய்து மங்களகரமாக வாழ கடவது என்று சொல்லப்படுகின்றது.

தோஷ நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், திருவாதிரை, புணர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் கால்கள் சித்திரை, விஷாகம் 4ஆம்கால் அனுஷம், கேட்டை, அவிட்டம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாமல் மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து, இயன்ற தான தர்மங்கள் செய்ய வேண்டும் என சொல்லப்படுகின்றது.

 

 

இந்த வருடம் சித்திரை வருடப் பிறப்பு உங்கள் அனைவருக்கும் இனிதே அமைந்திட மின்னல் 24 சார்பாக வாழ்த்துகின்றோம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்