கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பெல்பொல, பரகஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பதாக குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மத வழிபாடு நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இளைஞர்கள் இருவர் அவரை தாக்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையில் பணிபுரிந்து அதிலிருந்து விலகிய 24 வயதுடைய இளைஞரும், 18 வயதுடைய மற்றுமொரு இளைஞருமே இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இருவரும் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபர், எலமோதர ஆற்றில் கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தாக்குதலுக்கும் அவரின் மரணதுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்