‘கேப்டன் மில்லர்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

தனுஷ் நடிப்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியாகவுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் முன்னோட்ட காணொளி இன்று வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.