குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு
அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாயாதுன்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தனது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது, சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நெல் வயலில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய பண்டாரதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்