கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்தப் பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் அக்டோபர் 7 ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு சிறப்பாக நடந்தேறியது.

உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம், பட்டப்பின் படிப்பு பட்டங்கள், உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டங்கள் என 1760 பட்டங்கள் உறுதி செய்யப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமைதாங்கிய இப்பட்டமளிப்பு விழாவில், வேந்தரால் பட்டங்கள் உறுதி செய்ததுடன் பட்டதாரிகளுக்கான பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென் ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான பேராசிரியர் கர்ஷ அத்துருபனே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேளவாத்தியங்கள் மற்றும் பல்ககைலைக்கழக மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகளுடன், அனைத்து பட்டதாரிகளும் விழா மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டதுடன் பட்டமளிப்பு விழா மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. இதன்போது, வேந்தரின் ஆசிச்செய்தி ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களாலும், பட்டமளிப்பு விழா ஆசிச்செய்தி இலங்கை, பேராசிரியர் கர்ஷ அத்துருபனே அவர்களாலும் வழங்கப்பட்டன.

கிழக்குபல்கலைகழக பட்டமளிப்பு 2023

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்