கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்
புதிய அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இன்று புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 8.30 அளவில் இந்த வேலைத்திட்டம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கான பொது நிர்வாக சுற்றறிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை விடுக்கப்பட்டது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான அரச பணிகள் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்