கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு (வீடியோ இணைப்பு)

-யாழ் நிருபர்-

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கணை சந்தி பகுதியல் நிர்மாண வேலைகள் இடம்பெறும் பாலத்திற்குள் இருந்து இன்று வியாழக்கிழமை இரண்டு இளைஞர்களின் சடலமும் ,மோட்டோர் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலங்களை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநெச்சி மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இச்சம்பவமானது விபத்தா அல்லது கொலை என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.