களத்தில் உயிர்நீத்த கால்பந்து வீரர்

கானா நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரபேஃல் த்வமெனா உயிரிழந்துள்ளார் என கானா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

கேஎஃப் எக்னாட்டியா மற்றும் பார்ட்டிசானி அணிகளுக்கிடையிலான உள்ளூர் போட்டியின் போது ரபேஃல் த்வமெனா திடீரென சரிந்து கீழே விழுந்தார். இதனையடுத்து அவருக்கு வைத்தியர்களினால் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

28 வயதான ரபேஃல் த்வமெனா 2017 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை 09 போட்டிகளில் கானா சர்வதேச கால்பந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு ரபேஃல் த்வமெனாவிற்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்