கல்வி சக்தி என்னும் செயல் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் ‘கல்வி சக்தி’ என்னும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

‘கல்வி சக்தி’ திட்டத்தின் மூலம் பின் தங்கிய கிராமப் பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதட்கு சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி இணையம் மூலமாக கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இந்தியாவில் இருந்து வருகை தந்த பெங்களூரு உல்சூர் ரோட்டரி கழகம ரோட்டரி கழகத்தின் தலைவர் மோகன்குமார் உள்ளிட்ட குழுவினரும் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் ஞானகுணாளன், செயலாளர் ரகுராம் மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்