கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளது

கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 03 நாட்களுக்குள் டின் இலக்கம் அல்லது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்கு பெருமளவிலான மக்கள் பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

எதிர்காலத்தில் வாகனம் வாங்குதல்  மற்றும் பதிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் அவசியம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்