ஒரு பந்துக்குகூட முகங்கொடுக்காமல் ஆட்டமிழந்த அஞ்சலோ மெத்யூஸ்

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டி இன்று  திங்கட்கிழமை  இடம்பெறுகின்றது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான அஞ்சலோ மெத்யூஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாமலும், ஒரு பந்துக்குகூட முகங்கொடுக்காமலும் ஆட்டமிழந்து சென்றார்.

இவர் துடுப்பெடுத்தாட களத்துக்கு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டமையால் ஐசிசி சட்டவிதிகளுக்கமைய ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர் ஒருவர் இவ்வாறு ஆட்டமிழந்து செல்வது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்