ஊவா மாகாண பாடசாலைகளுக்கு 451 புதிய அதிபர்கள் நியமனம்

 

அதிபர் தரம் iii ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 451 புதிய அதிபர்களை, ஊவா மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பிலான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று திங்கட்கிழமை  பதுளை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய பதில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த அதிபர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியதோடு, அதில் சிங்கள மொழி மூலமும் 363 பேரும், தமிழ் மொழி மூலமும் 88 பேரும் அதிபர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, ஊவா மாகாண பிரதம செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்