உரும்பிராய் கிழக்கு முதியவர்கள் கௌரவிப்பு
-யாழ் நிருபர்-
உரும்பிராய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு இடம் பெற்றது.
கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முதியவர்களை கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் தேசோதய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.ரமணன், கிராம முதியவர்கள், தேசோதய அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்