உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு
தெல்கொட நரங்வல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை தனது வீட்டில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மீகாஹவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோம்பே பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் வசிப்பவர்கள் யாரும் இல்லாத வேளையில், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்