உணவகங்களில் திடீர் களப் பரிசோதனை:
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகிலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் ஜே.மதன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட இந்த திடீர் பரிசோதனையின் போது முறையற்ற வகையில் உணவு தயாரிக்கும் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திடீர் களப் பரிசோதனையின் போது மூன்று உணவகங்கள் ஒரு மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் பழக்கடை போன்றனவும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன என்றும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டும் எங்கள் பணி என்றும் தொடரும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்