இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மோதல் தொடர்பிலான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்-

இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் தொடர்பாக யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியம், மற்றும் கல்விச்சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாலை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு ஆலய மண்டவத்தில் நடைபெற்றது.

இதில் வல்லரசு நாடுகளின் கீழ் உள்ள இஸ்ரயேல் , பாலஸ்தீன ஆகிய நாடுகளின் மோதல்கள், மற்றும் கொல்லப்பட்ட மக்களில் நிலைப்பாடு, இலங்கை, இந்தியா நாடுகளின் ஆதிக்க தன்னை, சர்வதேச நாடுகள் மட்டத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் மோதல் தொடர்பான சர்வதேச பார்வைகள், தேசிய இனத்தின் அழிவுக்கான பாதை, மனித உரிமைகள் மீறல், ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம், அரசபயங்காரவாதம், கமாஸ் பயங்கரவாத சட்டம், சர்வதேச நாடுகளுடாக அன் நாட்டின் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியவர்களுடான உரையாடல்கள் பற்றியும் இதில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதில் ஏற்புரையினை அருட்தந்தை ஏம்.வி.சி ரவிச்சந்திரன் ஆற்றினார். அத்துடன் சிறப்பு பேச்சாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல்த்துறை விரிவுரையாளர் கே.ரீ.கணேசலிங்கம் நிகழ்த்தினார்.

இதில் அருட்தந்தையினர், அருட்சகோதர்கள் கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்