இரண்டு தசாப்தங்களின் பின்னர் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்

-கிண்ணியா நிருபர்-

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்கள் பாடசாலையில் விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆகின்றன. இதனை முன்னிட்டு தரம் ஒன்று தொடக்கம் 13 வரை கல்வி கற்ற ஆசிரியர்களை நன்றியுடன் ஞாபகப்படுத்துவதற்காக கடந்த சனிக்கிழமை திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று கூடல் ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.

இதனை ஏற்பாடு செய்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக 2003 O/L மற்றும் 2006 A/L மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதன் விளைவாக  திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இவ்வாறான ஒரு நிகழ்வினை நடத்துவதற்கு முடிந்தது .

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமை ஆற்றி தற்போது வேறு பாடசாலைகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும். இதே கல்லூரியில் தற்போதும் கூட கடமையாற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஆசிரியர்களும், அதேபோல தற்போது ஓய்வு நிலையில் இருக்கக்கூடிய ஆசிரியர்களும் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் இன்றைய தினம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதற்காக வருகை தந்திருந்தமை மன மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தக் கல்லூரியில் 2003 ஆம் ஆண்டு O/L மற்றும் 2006ம் ஆண்டு A/L வகுப்புக்களில் கற்ற மாணவர்கள் நாட்டின் நாலா பகுதிகளிலும் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குடும்ப சகிதம் வருகை தந்திருந்தமை இந்நிகழ்வினை மேலும் மெருகூட்டியது .

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் அதேபோன்று சிற்றூழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்