இன்று தங்கத்தின் விலை நிலவரம்
தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை சற்று உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று தங்க அவுன்ஸின் விலையானது 654,926.36 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இது சிறிய உயர்வாகும்.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்று தங்க அவுன்ஸின் விலை 656,237 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,150 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 185,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 169,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,230 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,260 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 162,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்