இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற நபர் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் தமிழக கரையோர பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் சந்தேகநபர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்