ஆயுத பூஜை அன்று வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம் மற்றும் படைக்க வேண்டிய படையல் அத்துடன் இறைவனை வணங்க வேண்டிய முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக நவராத்திரி விழா விளங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்கள்வழிபடப்படுகிறது. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விழாவின் இறுதியில் சரஸ்வதி தேவியை பூஜை செய்து வழிபடுவதால் அந்த நாள்சரஸ்வதி பூஜை என்று அழைக்கப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்கும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால் கல்வி ஞானம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய சரஸ்வதி தேவியை வணங்குவதும் உண்டு.
ஒரு மனிதனின் வாழ்வில் கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது பழமொழி. எனவே நாம் செய்யும் தொழிலையும், அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பாக வைத்து வழிபடும் முறையும்இ இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆயுத பூஜை எதிர்வரும் திங்கட்கிழமை வருகிறது.
ஆயுத பூஜை அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள்ளும் பூஜை செய்து இறைவனை வழிபடலாம். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம், அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகும். அவரவர் வழிபடும் இடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம், பூ, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்