ஆடை ஏற்றி சென்ற லொறி விபத்து: ஒருவர் காயம்
குருநாகலிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி வட்டவளை பாடசாலைக்கு அருகில் இன்று செவ்வாய் கிழமை காலை வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடை விற்பனைக்காக ஹட்டன் நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதுடன் விபத்தில் காயமடைந்த சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்