அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட புதிய விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கை

-மூதூர் நிருபர்-

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பயனாளிகளாக உள்வாங்கப்படாதவர்களின் புதிய விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதில் தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவில் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத பல பொதுமக்கள் தமது விண்ணப்பங்களை ஒப்படைத்ததோடு முறைப்பாடுகளையும் மேற்கொண்டதையும் காணமுடிந்தது.

மூதூர் பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் எம்.அலாவுதீன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் புதிய விண்ணப்பங்களை பெறும் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.