அம்பாறை திருக்கோவிலில் ஊருக்குள் புகுந்த முதலை

-தம்பிலுவில் நிருபர்-

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03 பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிரதேச வாசிகள் மடக்கி பிடித்தனர்

பிடிபட்ட முதலையினை பிரதேச வாசிகள் வனஜீவரசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதற்கு சரியான நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களை பாதுகாக்குமாறு திருக்கோவில் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்