
வேகக்கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த லொறி
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியொன்று பெரிய வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தேயிலை மலைக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது லொறியின் சாரதியுடன் மேலும் இருவர் பயணித்துள்ளதுடன் சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக, வேக கட்டுப்பாட்டை இழந்து லொறி விபத்திற்குள்ளாகியுள்ளமை விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
