-கிண்ணியா நிருபர்-
வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற புனிதமான சிவராத்திரி நாளில் இடம் பெற்ற சம்பவம் அடக்குமுறையானது, இதனை காவல் துறையினர் மேற்கொண்டமை கண்டிக்கத்தக்கது, என அகத்தியார் அடிகளார் தென்காயிலை ஆதினம் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் வழிபாட்டில் ஈடுபடும் போது இவ்வாறான விடயங்களை மேற்கொள்வது நல்லதல்ல, ஒரு சமுதாயத்திற்கு பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் இது ஏற்றதல்ல .
இறைவனை வழிபடும் போது அடக்குமுறையான நிகழ்வு சைவத்திற்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் ஏற்க முடியாது, என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்