வீடொன்றின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியம் தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைகுழியில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த பெண் ஒருவரிடம் பணம் வழங்கிய நிலையில் அதனை திருப்பித் தருமாறு பலதடவை கோரிய நிலையில் பணம் தருவதாக அழைத்து குறித்த பெண்ணை கொலை செய்து புதைத்ததாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

குறித்த பெண் கடந்த மாதம் முதலாம் திகதி காணாமல் போனதாக அறியப்பட நிலையில் தற்போது மணியன் தோட்டத்து பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.