
விடுதிகளில் தனியாக தங்கும் ஆண்களுக்கும் தொல்லையா?
அமெரிக்காவில் விடுதி அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்துள்ளார்.
டென்னசி மாகாணத்தில் சவுத் ஹில்டன் என்ற ஹோட்டல் கடந்த மார்ச் 30ஆம் திகதி ஆண் ஒருவர் தனியாக தங்கியுள்ளார்.
இவர் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது, அதிகாலை 5 மணி அளவில் யாரோ மர்ம நபர் நுழைந்து தன்னை சீண்டுவது போல உணர்ந்துள்ளார்.
படுக்கை அருகே இருந்த விளக்கை ஒன் செய்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஹோட்டலின் மேலாளரான டேவிட் நீல் என்பவர் அறைக்குள் நுழைந்து அந்த நபரின் கால் விரல்களை வாயால் நக்கியுள்ளார்.
மேலாளர் டேவிட்டின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் பொலிஸாரிடம் புகார் அளிக்கவே, 52 வயதான மேலாளர் டேவிட் நீல் கைது செய்யப்பட்டார்.
இவர் நிர்வாகத்திடம் இருந்த கார்ட் சாவியை பயன்படுத்தி அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அறைக்குள் புகை வாசனை வந்தது போல தோன்றியதாகவும், வாடிக்கையாளர் பத்திரமாக இருக்கிறாரா என்று பார்க்கவே அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார் டேவிட் நீல். இருப்பினும், கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
