வாகன விபத்தில் 20 பேர் காயம்: விபத்து காரணமாக வாகன நெரிசல்
வரகாபொல, தும்மலதெனிய பிரதேசத்தில் இன்று புதன் கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியொன்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.