
-நுவரெலியா நிருபர்-
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.
பொகவந்தலாவை மோரா பகுதியிலுள்ள பெருந்தோட்டப் பயிற்சி நிலையத்தில் செயன்முறைப் பட்டறைக்காக வந்த மாணவர்கள் குழுவே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர் குழுவில் உள்ள 06 மாணவர்கள் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
