ரயில் மோதி இருவர் பலி
கொழும்பு – தெஹிவளை ரயில் மோதி இருவர் பலி
கொழும்பு – தெஹிவளை ரயில் பாதையை கடக்க முயன்ற தம்பதியினர், நேற்று புதன் கிழமை மாலை கொழும்பு கோட்டையிலிருந்து அலுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
பதுளை, பதுளபிட்டிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஆண் மற்றும் 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24