ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்