
ரயிலிலிருந்து விழுந்த வெளிநாட்டுப் பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடம்
ஒஹிய ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை எல்ல ஓடிசி ரயிலிலிருந்து வீழ்ந்து சுற்றுலா பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றுலாப் பயணி கண்டியிலிருந்து எல்ல நோக்கிப் பயணித்த சீனாவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண்இ சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.