யாழ்ப்பாணத்தில் பயணிகள் பேருந்து விபத்து

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பயணிகள் பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து தரம்புரண்டுள்ளதாக அறியமுடிகின்றது..

விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்