மோட்டார் சைக்கிள் திருட்டு: இருவர் கைது

சம்மாந்துறை பகுதியில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறையைச் சேர்ந்த 20 மற்றும் 28 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே இதன்போது பொத்துவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல் 13ம் வீதி, மலையடிக்கிராமம் 03 எனும் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை அதிகாலை 02.30 மணியளவில் பெறுமதி வாய்ந்த ஹீரோ ஹங் (Hero Hunk) எனும் வகை மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் பொத்துவில்லில் மோட்டார்சைக்கிளுடன் இருப்பது தெரியவந்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.