
மேலும் 7 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த 7 பேரும் படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள ஐந்தாம் மணல் தீடை பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்றடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் கடலோர காவல்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.