மும்பை படகு விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு!

இந்தியா-மும்பையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை கடற்பரப்பில் 80 பயணிகளுடனும் 5 பணியாளர்களுடனும் பயணித்த படகொன்று கடந்த 18 ஆம் திகதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த படகு பயணிகள் கப்பல் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.