முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதி ( EPF) மோசடி வழக்கில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராபின் உத்தப்பா 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி, கடந்த 2022ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது ராபின் உத்தப்பா, செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.