
மீண்டும் முகக்கவசம் அணியுமாறு அறிவித்தல்
பொது இடங்களுக்குச் செல்லும்போதும் பயணத்தின்போதும் முன்னரைப் போல முகக்கவசத்தை அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமையால், கொவிட் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும், என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக விலகல் மற்றும் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.