
மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்தவர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
