‘மிஸ்டர் சந்திரமௌலி’ நடிகர் காலமானார்

மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (வயது 93) உடல் நலக்குறைவால் இன்று புதன்கிழமை சென்னையில் காலமானார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நாயகனான கார்த்தி,  ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரைக் கூப்பிடும் காட்சி மிகப் பிரபலம்.

1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தேன் சிந்துதே வானம், துர்கா தேவிஇ தூண்டில் மீன் உள்ளிட்ட 8 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பொண்டாட்டி தேவை, தாயம்மா, சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சில நாள்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார்.

அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172