
பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை
-கல்முனை நிருபர்-
களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார பணிமனையினால் பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆர்.இராஜேந்திரன் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது.
பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் உடல் உள நலன்கள் பரிசோதிக்கப்பட்டு அதற்க்கான வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று புதன்கிழமை கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் தரம் 01, தரம் 4, தரம் 7, தரம் 10 ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களின் உடல் நிறை, உயரம், கண், பல், கை நகங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இங்கு நடைபெற பரிசோதனைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான கே..இளங்கோவன், எஸ். எஸ்.ஜீவிதன், ரி.கஜானன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.