
மற்றுமொரு சிறுமி மாயம்
யக்கல பெலும்மஹர பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை நேற்று புதன் கிழமை காலையிலிருந்து காணவில்லை என அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகே தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு கமராக்களை பரிசோதித்து சிறுமி கடத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
