மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
பண்டாரகம, பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேசிய நீர் வழங்கல் சபையின் ஒப்பந்த அடிப்படையில் சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும், அகலவத்தை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமணமாகாத ராவேது ஹசித் ஆரியவன்ச (வயது – 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்றுமொரு நபரும் அவர்கள் தங்குவதற்கு வழங்கப்பட்ட இரண்டு மாடி வீட்டில் தங்கியிருந்ததாகவும், இருவரும் மாலையில் விருந்து வைத்ததாகவும் அதன் பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்