மரம் முறிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்

கண்டி குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடை சேதமடைந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குண்டசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்