மதுபோதையில் தனது 5 வயது மகளை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய தந்தை

மதுபோதையில் தந்தையொருவர் தனது மகளை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.கெற்பேலி மேற்கு மிருசுவிலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் தாய் இல்லாத போது, தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது 5 வயது மகள் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்கியதில், கை முறிந்து காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.