மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணியகத்தினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுகாதார மேம்பாட்டு பாலர் பாடசாலைகளை வலுப்படுத்தும் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக இரண்டு நாள் பயிற்சி பட்டறை இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அமைந்துள்ள டாக்டர் எஸ் சதுர்முகம் கேட்போர்கூடத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பாடசாலை சிகிச்சையாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், ஆரம்ப பிள்ளை பராய பராமரிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்